states

img

காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் கண்டுபிடிப்பு

ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்திய படிவுகள் இருப்பதை இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தின் சலால்-ஹைமானா பகுதியில் 5.9 மில்லியன் டன் அளவிலான லித்திய படிவுகள் இருப்பதை இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். லித்தியம் கனிமமானது செல்போன், லேப்டாப், டிஜிட்டல் கேமரா, மின்சார வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரியின் மூலப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.